ஊராட்சி செயலர் உறங்குகிறாரா பொதுமக்கள் மழை நீரில் அவதி!

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல் பாதி ஊராட்சி செயலர் உறங்குகிறாரா பொதுமக்கள் மழை நீரில் அவதி!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை மேல் பாதி ஊராட்சியில் சுமார் 10000 பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் வருடாந்தோறும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஊராட்சிகளை சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்க,பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில். பாளையங்கோட்டை மேல் பாதி ஊராட்சியில் ஊராட்சி செயலர் பொதுமக்களை இதுவரை சந்தித்து குறைகளை சரிவர செய்து தரப்படவில்லை எனவும் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் ஊராட்சி செயலர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவும், அதோடு குடிநீர் போதிய அளவு கிடைக்கவில்லை என இப்பகுதி கிராமவாசிகள் குற்றம் சாட்சி வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு அதோட இந்த ஊராட்சி செயலர் எந்த ஒரு ஊராட்சியிலும் ஒழுங்கான முறையில் வேலை செய்தது இல்லை என இங்கு உள்ள அதிகாரிகளின் இவர் மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர்