14.11.2025
சேரன்மகாதேவி,
சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் திரு. சிவகுமார் மாணவர்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் திருமதி. இரா. மரகதவல்லி தலைமை வகித்தார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. எஸ். நைனா முகமது, பள்ளி வேளாண்மை குழு தலைவி திருமதி. சைலா கேத்தரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமிழ் ஆசிரியை திருமதி பூ. சிவகாமி அனைவரையும் வரவேற்றார், ஆசிரியர் திரு. சங்கரநாராயணன் சிறப்புரை ஆற்றினார், விழாவில் மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, ஆசிரியர்கள் மாணவிகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர், மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.






