வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள் மீது இடி விழுந்து 4 பேர் பலி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வேப்பூர் அருகே கழுதூர் அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் த/பெ தர்மலிங்கம் இவருடைய புஞ்சை வயல் காட்டிற்கு மக்காச்சோளத்திற்கு களை எடுக்கும் பணி வேலைஆட்கள் மூலம் மேற்கொண்டிருந்நனர்.
அப்போது இடியுடன் பெய்த மழையினால் வேலை பார்த்துக்கொண்டிருநேத கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி கனிதா, ராமசாமி மனைவி பாரிஜாதம், சின்னப்பொண்ணு என்கின்ற ராஜேஸ்வரி / அர்ஜுனன்,
அரியநாச்சியை சேர்ந்த சிவகுமார் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் கழுதூர் கிராமத்தை சேர்ந்த கதிரவன் மனைவி தனலட்சுமி என்பவர் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற வேப்பூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்துவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றானர்.






