நாங்குநேரி M.L.A திரு ரூபி மனோகரன் அவர்களுடன் சந்திப்பு!

நாங்குநேரி வட்டம் முனைஞ்சிபட்டி பஞ்சாயத்து மேல முனைஞ்சிபட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு நலச்சங்கத்தின் சார்பாக திருM.V. தங்கராசு ( V.A.O ஓய்வு) அவர்கள் தலைமையில் அதன் நிர்வாகிகள் கீழ் காணும் கோரிக்கைகளுக்காக M.L.A திரு ரூபி மனோகரன் அவர்களை சந்தித்து இன்று மதியம் 12.30 மணிக்கு அவர் இல்லத்தில் வைத்து கோரிக்கை மனு அளித்தனர்

மனுவில் மேல முனைஞ்சிபட்டியில் வசிக்கும் 80 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட, அவர்கள் பயன்பாட்டில் உள்ள 2 ஏக்கர் இடத்தில் ஒரு சமுதாயகூடம் அமைத்து தந்தால் சுப காரியங்கள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சமுதாயகூடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அத்துடன் ரோடு வசதியும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுவை பெற்றுக் கொண்டM.L.A அவர்கள் பத்து லட்சம் மதிப்பீட்டில் நிச்சயம் செய்து தருகிறேன் என்று உறுதியளித்து, ஆவன செய்ய தன் உதவியாளருக்கும் உத்தரவிட்டார்கள்.

கனிவோடு நம் கோரிக்கைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்த நமது நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் திரு ரூபி மனோகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றோம்.

-நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மேல முனைஞ்சிபட்டி.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்…

திரு M.V.தங்கராசு ,M.நயினார்,M.மதியழகன் K அண்ணாதுரை,T.முருகன்,V.விஜயராஜா நட்புக்காக.A.பிரபாகரன் அட்வகேட்