சுவர் இடிந்து விழுந்து இறந்த சிறுமி வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த அமைச்சர் அன்பில்மகேஷ்.

திருச்சியில் சுவர் இடிந்து விழுந்து இறந்த சிறுமி வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த அமைச்சர் அன்பில்மகேஷ்.

மழையினால் வீடு இடிந்து விழுந்த இறந்த 12 வயது குழந்தையின் இல்லத்திற்கு சென்று பெற்றோர் களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டமலைக்கோட்டை பகுதி 17_வது வார்டுசத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த (6.9.25) அன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடு களில் சிக்கி சிவா மற்றும் சுகந்தி தம்பதியர் களின் மகள்12_ வயது கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை யொட்டி இன்று அவருடைய இல்லம் சென்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நிதியுதவிஅளித்தார்.உடன் மாநகரக் கமகச் செயலாளர் மு மதிவாணன் பகுதி செயலாளர்ஆர்.ஜி பாபு வட்ட கழக செயலாளர் மனோகர் மாவட்ட கல்வி அலுவலர்கோ. கிருஷ்ணபிரியா JE பிரபாகரன்திருமதி புஸ்பராணி மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.