மூதாட்டி இடம் 3 பவுன் தங்கச் செயின் திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.போலிசாரை எஸ்பி பாராட்டினார்!

மூதாட்டி இடம் 3 பவுன் தங்கச் செயின் திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.போலிசாரை எஸ்பி பாராட்டினார்.

மூதாட்டி இடம் 3 பவுன் தங்கச் செயின் திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.போலிசாரை எஸ்பி பாராட்டினார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அம்மணி வயது 60 கணவர் பெயர் பொன்னுசாமி இவர் கடந்த 8.9.2025 அன்று 100 நாள் வேலை செய்வதற்காகநடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் மூதாட்டியை ஏற்றிக்கொண்டு கொரக்கவாடி ஏரிக்கரை ரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

வாகனத்தில் இருந்து இறங்கிய மூதாட்டி தனது கழுத்தை பார்த்துள்ளார் அப்போது அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை அந்த மர்ம நபர் பின்புறமாக பறித்து சென்றது தெரியவந்தது.

 

உடனே இது குறித்து இராமநத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து மர்ம நபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவின் பேரில்,திட்டக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மேற்பார்வையில், இராமநத்தம் காவல் ஆய்வாளர் பிருந்தா,காவல் உதவி ஆய்வாளர்கள் ஜம்புலிங்கம் மற்றும் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆய்வில் மூதாட்டி இடம் தங்கச் செயினை பறித்துச் சென்றது பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் பெரியார் நகரைச் சேர்ந்த பிரபாகரன் வயது 39 தந்தை பெயர் பெருமாள் என்பது தெரியவந்தது உடனே அந்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 3 பவுன் தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.

சிறப்பாக பணி செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த மேற்க்கண்ட போலிசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பாராட்டினார்.