தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை சென்னை ஐகோர்ட்!

சென்னை: ஆக.13 சென்னை ஐகோர்ட்டு நீதி­பதி ஜி.ஜெயச்­சந்திரன் இன்று காலை வழக்­கு­களை விசாரிக்­கத் தொடங்கி­னார்.அப்­போது, சுதந்திரதினத்­தை­யொட்டி குடியி­ருப்பு நல சங்­கத்தில் கொடி­யேற்றுவதை முன்னாள் நிர்­வா­கிகள் தடுப்­பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்­பதாகவும், அதை நாளைஅவ­சர வழக்­காக விசா­ரிக்க வேண்­டும் என்­றும்ஒரு வக்­கீல் முறை­யீடுசெய்­தார்.
குடியிருப்பு பகுதியில் தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­தார்.அதற்கு நீதி­பதி, சுதந்­திர தினத்­தை­யோட்டி
தேசிய கொடி ஏற்றுவதை தடுப்­ப­வர்­களை குண்­டர் சட்­டத்­தில் சிறை­யில் அடைக்க
வேண்­டும் என்று கருத்து தெரிவித்­தார்.
தேசியக் கொடி­யேற்றபாதுகாப்பு வழங்குவது அவ­மா­னம்.கொடி ஏற்றுவதை
யாரும் தடுக்க முடியாது.தடுப்­போர் மீது போலீ­சார் கடும் நட­வடிக்கை எடுக்­கா­விட்டால் வழக்கு தொட­ர­லாம் என்று நீதி­பதிகூறி­னார்