உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்!

திருச்சி, மாவட்டம் திருவரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட
பேருர் மற்றும் குழுமணி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் மாவட்டம் தோறும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவதாக திட்டமிட்டு காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் துவக்கிய நிலையில்
குழுமணி மற்றும் பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் குழுமணி தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமினை திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததுடன் முகாமில் உள்ள 16 துறைகளான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. மாற்றுத்திறனாளி கள் துறை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. எரிசக்திதுறை.கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை‌ தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை. ஆகிய துறை களின் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடையே அனைத்து உதவிகளையும் அதிகாரிகளிடம் கூறி கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் மகளிர் நலன் கருதி கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் வழங்கப் பட்டு வருவதாகவும் இதை தகுதி வாய்ந்த அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என்றும் இது மக்களுக்கான சிறப்பு முகாம் என்றும் இதை தவறாது பயன் படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுமக்களிடையே எடுத்துரைத்தார் . இந்நிகழ்வில் ஊராட்சி வருவாய்த்துறையில் பட்டா வேண்டி விண்ணப்பித் தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.மற்றும் சாதி சான்றிதழ் விண்ணப்பித்தவர் களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தி.மு.க பிரமுகர்கள் அநந்தநல்லூர் ஒன்றிய துணைத் தலைவர் மலர் அறிவரசன் மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் லட்சுமணன் கைகுடி சாமி.சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் ரவிச்சந்திரன்.மற்றும் ஸ்ரீரங்கம் தாசில்தார் செல்வகணேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் ஊராட்சி செயலாளர்கள் குழுமணி அறிவழகன். பேரூர் செந்தில்குமார்,திருப்பராய்த்துறை பாஸ்கர்,பெருகமணி கார்த்தி,
கோப்பு பாலசுப்பிரமணியன்,திருச்செந்தூரை ஜெகதீஷ்,போசம்பட்டி உமாராணி,மல்லியம்பத்து தாமோதரன்,மருதாண்டக்குறிச்சசி சுரேஷ் கண்ணன்.கம்பரசம்பேட்டை பார்த்தசாரதி, மக்கள் நலபணி யாளர் பாரி மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் என ஏராளமா னோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.