சேரன்மகாதேவியில் இளைஞர்கள் முயற்சியால் உருவான நூலகம், இன்ஸ்பெக்டர் திறந்து வைத்தார்!
சேரன்மகாதேவி ஆக.19 : சேரன்மகாதேவியில் இளைஞர்கள் முயற்சியால் அமைக்கப்பட்ட புதிய நூலகத்தை இன்ஸ்பெக்டர் தர்மராஜ் திறந்து வைத்தார் சேரன்மகாதேவி, பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு நாலாந்தெரு, தெற்கு நாலாந்தெரு பகுதியில் ஆதிதிராவிடர்கள் மக்கள் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளான இளைஞர்கள் ஒன்றிணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக அப்பகுதியில் புதிய நூலகத்தை அமைத்துள்ளனர். இங்கு பள்ளி மாணவர்களுக்கான நீதிக்கதைகள், கல்லூரி மாணவர்களுக்கான, அரசு தேர்வு பயிற்சி புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன,இந்த புதிய நூலகத்தின் திறப்பு நேற்று முன் தினம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்து புத்தகங்களை பரிசாக வழங்கினார். தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தில் முக்கியத்துவம் குறித்து இன்ஸ்பெக்டர் தர்மராஜ் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். இதில் ஊர் நாட்டாமை தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






