தூத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை!
தூத்துக்குடி, ஆக.5தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி மாதன் கோவில் ரோடு, கிருஷ்ணன் கோவில் ஜங்ஷனில் கடந்த ஜூலை 13ம்தேதி லோடு ஆட்டோ ஒன்றில் 40 மூடைகளில் சுமார் 2000 கிலோ ரேசன் அரிசியை கடத்திய எதிரி கோவில்பட்டி, ஊரணி1வது தெருவைச் சேர்ந்தலுக்கா அசாரியாமகன் முத்து மாரியப்பன் @ சின்னமாரி, (33) என்பவர் 16ம் தேதி கைதுசெய்யப் பட்டார். எதிரியை கள்ளச்சந்தை காரர் தடுப்புக் காவலில் சிறை யில் அடைக்க மதுரை,தென்மண்டல கு.பொ.வ.கு.பு.துறைகாவல்கண் காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அறிவுரையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 31ம் தேதி முத்து மாரியப்பனை கள்ளச்சந்தைகாரர் தடுப்புக் காவலில் சிறை அடைக்க உத்தரவுப்பிறப்பித்தன் பேரில், நேற்று 1ம் தேதி பாளையங்கோட் டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.தொடர்ந்து பொது விநியோகத்திட்ட அரிசியை கள்ளச்சந்தை யில் பதுக்கும் கடத்தலில் ஈடுபடும் எதிரிகளை கள்ளச்சந்தைகாரர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.






