முதுகுளத்தூர், ஆக.3 – முதுகுளத்தூர் தூரி செல்வநாயகபுரம் கிராமத் திற்கு பாத்தியப்பட்ட வடக்கு
வாசல் செல்லி யம்மன் கோவில் 49- ம்ஆண்டு பூச் சொரிதல் விழாவையொட்டி 1ந் தேதி விளக்கு பூஜை நடைபெற்றது விளக்குபூஜையில் 2008 குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.அனைவருக்கு இரவு அன்னதானம் வழங்கப்பட்டன. 2ந் தேதி மாணவ, மாணவியரின்
விளையாட்டு போட்டியும் 3ந் தேதி திருக்குறள் போட்டியும், 4ந் தேதி வளையல் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா5ந் தேதி அனைத்து மக்களுக்கும் பொது அன்னதானம் நடைபெறும்அதனைத் தொடர்ந்து தினம் அன்ன தானம் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 8ந் தேதி பூக்குழி மற்றும்
முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்வு நடைபெறுகிறது. 9ந் தேதி முளைப் பாரி ஊரணியில் கரைக் கப்படும். விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் இராம லிங்கம்,பொருளாளர் பெருமாள், செல்வநாயகபுரம் ஏ.சந்திரராஜ், பக்தசபை அறக்கட்டளை
நிர்வாகிகள் எஸ்.இராமமூர்த்தி, ஆசிரி யர் ஆர்.மாடசாமி கே. இளங் கோவன் உள்படநிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் 49-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது






