முட்டைகோஸ் விலை வீழ்ச்சி:விவசாயிகள் வேதனை!

உதகை,ஆக.3 – நீலகிரியில் விளை யும் முட்டைக்கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாற்போல ஒரு
கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 மட்டுமே விலை கிடைத்து வருவ தால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும்முட்டைக்கோஸ்கள் கேரளம்,கர்நாடகம், சென்னை கோயம் பேடு போன்ற சந்தைகளில் விற்கப்பட்டு வருகின்றன.உதகை, கோத்தகிரி, குன்னூர்போன்றபகுதிகளில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டதால் கடந்த சில நாட்க ளாக மண்டிகளில் சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை தரத்துக்கு ஏற்றார்  போல விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது கிடைக் கும் விலை அறுவடை கூலிக்கும், போக்குவரத்து செலவுக்கும் கூட கட்டுபடியாவதில்லை என்பதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளதாக  கூறுகின்றனர்.