ஆகஸ்ட் 1 ல் வெளியாகும் படம் போகி. FILM REVIEW

Vi CINEMA GLOBAL NETWORKS &Like தயாரிப்பில் விஜயசேகரன் இயக்கத்தில், நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன்  சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார்  மற்றும் பலர் நடித்து

ஆகஸ்ட்  1 ல் வெளியாகும் படம் போகி. கதை

சென்னை நகரம் தற்போது உலகத்தரம் வாய்ந்ததாகவும், தொழில்நுட்பம் வானத்தை விட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்த சூழ்நிலையில் Ai என்ற புதிய தொழில்நுட்பம் மக்களை மிரட்டும் சூழ்நிலையில் பெண் பிள்ளைகளை பெற்ற தாய், தந்தை,சகோதரர்கள் நாளுக்கு நாள் பதட்டத்துடன் வாழும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுமார் 6000 அடி உயரத்தில் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் சைக்கிள் கூட செல்ல முடியாத இந்த மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நாயகன் அழகர் தனது தங்கை கவிதா மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான் சில கிலோமீட்டர் மலையில் கால்நடையாக சென்று படித்துவிட்டு வீடு திரும்பி மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அந்த மலை கிராமமே பெரும் கனவோடு வழி அனுப்பி வைக்கிறார்கள்.

இறுதியில் கவிதா மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்தாரா? இல்லையா? என்பதே  படத்தின்  மீதிக்கதை.

இதில் நடித்திருக்கும் நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர், வேலா ராமமூர்த்தி, கவிஞர் சினேகன்  சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார்  என அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மரியா மனோகர் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. ராஜா C சேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். S.T.சுரேஷ்குமாரின் வசனம் அருமை.

இயக்குநர் விஜயசேகரன்  சமூக அக்கறை மிக்க அழுத்தமான  படைப்பை

நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில்

எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள். பார்க்கலாம்