மதுரை ஒத்தக்கடையில் அசைவ ஹோட்டல் நடத்திவரும் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி) தந்தை செம்பையா (சரவணன்), தாய் பொட்டு (தீபா சங்கர்) மற்றும் தங்கை ராகவர்த்தினி(ரோஷ்னி), தம்பி தம்பிகண்ணாவுடன் (ரோஹன்) வாழ்ந்து வருகிறார். அவருக்கு வளநாட்டைசேர்ந்த பட்டதாரி பேரரசியை (நித்யா மேனன்) பெண் பார்க்கிறார்கள்.
பார்த்தவுடன் ஒருவர் மீது
ஒருவருக்கு விருப்பம்உண்டாகிறது. இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். சில நாட்களில் ஆகாசவீரனுடையதம்பி, மற்றும் தந்தை அனைவரும் ரவுடிகள் எனதெரியவர, பேரரசி வீட்டில் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர்.அதே போல ஆகாச வீரன் தாய் பொட்டு பெண் ணின் ஜாதகத்தை பார்க்கும் போது பேரரசி மருமகளாக வந்தாள் குடும்பத்தை பிரித்து விடுவாள் என்று சொல்ல ஆகாச வீரன் தாய் பொட்டு இந்த சம்பந்தம் வேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் ஆகாச வீரன் இரு குடும்பத்தினர் கள் எதிர்ப்பையும் மீறி பேரரசியை திருமணம் செய்கிறார். சந்தோஷ மாக போகும் இவர்களது திருமண வாழ்க்கை, சில நாட்கள் கழித்து அவர்கள் இருவருக்குள் நடக்கும் வாக்குவாதங்கள் மற்றும் சின்ன சின்ன சண்டைகள் நடக்கிறது. மீண்டும் சமாதானம் ஆகி இருவரும் குடும்பம் நடத்துகிறார்கள்.ஆகாச வீரனின் தந்தை செம்பையா (சரவணன்)பேரரசியை கல்லாவில் உட்கார சொன்ன பிறகு வீட்டில் மாமியார் மற்றும் ஆகாச வீரனின் தங்கையால் தொடங்கும் ஈகோ பிரச்சினை ஏற்பட்டு, குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. தாயும் சகோதரியும் தங்கள் வீட்டையும் உணவகத்தையும் வீட்டு மருமகள் வசம் போனதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.அதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் நடக்கும் சண்டையில் பேரரசி கோபித்துக் கொண்டு குழந்தை மகிழினியுடன் (குழந்தைமகிழினி) தாய் வீட்டிற்கு செல்கிறாள். இதை காரணமாக வைத்து இரண்டு குடும்பத்தாரும் இருவரையும் பிரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இருவரும் மூன்று மாதங்கள் பிரிந்துள்ள நிலையில் ஆகாச வீரனுக்கு தெரிவிக்காமல் அவர் மகள் மகிழினிக்கு குலதெய்வ கோவிலில் மொட்டை அடிக்க பேரரசியின் குடும்பம் கூடுகிறது.
பாதிமொட்டை அடித்த நிலையில் விஷயம் அறிந்து பேரரசியின் கணவன் ஆகாச வீரன் குலதெய்வ கோயிலுக்கு வந்து தகராறு செய்கிறார். விஷயம் அறிந்து ஆகாச வீரன் குடும்பத்தி னர் அங்கு வந்து பேரரசி யின் குடும்பத்தினருடன் சண்டை போடுகிறார்கள். கோவிலுக்கு வந்தசொந்த பந்தங்களும், மற்ற ஊர் மக்களும் அவர்கள் இருவரை யும் சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர், ஆனால் வாய்ச் சண்டை முற்றி மோதலில்முடிகிறது. அதன் பின் என்ன நடந்தது? இருவரும் பிரிய யார் என்ன காரணம்? இருவரும் சமாதானம் ஆகி பாதியில் நின்ற குழந்தையின் மொட்டை மீண்டும் நல்ல படியாக நடத்தினார்களா? என்பதை சுவாரசியமாகவும்,கலகலப்பாகவும் சொல்லி இருக்கும் படமே தலைவன் தலைவி.கணவன் மனைவிக்கும், எல்லைகள் இல்லாத சுயநலக் குடும்பங் களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் நாயகனும் நாயகியும், படத்தின் வலுவான சிறப்பம்சம். விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஜோடியின் இருவரின் ஆளுமை படத்தை கணிசமாக உயர்த்துகிறது. நிறைய துணை கதாபாத்திரங்களுக்கும் திரையில் சமமான வாய்ப்பு இருக்கும் போது, ஈகோவிற்கும் உணர்ச்சிக்கும் இடையில் சிக்கிய ஒரு மனிதனாக விஜய் சேதுபதி கத்தி பேசுவதும், கோபத்தில் செல்லும் மனைவியை கெஞ்சுவதும்,தன் குடும்பத்தினரை சமாளிக்க திணரும் போது, சண்டைக் காட்சிகளில் உடல் மொழி மூலம் அவருக்கே உரித்தான பாணியில் அசத்தலான நடிப்பு மூலம் தனித்து நிற்கிறார்.நித்யா மேனன் விஜய் சேதுபதியின் மனைவி பேரரசியாக இதுவரை அவர் நடித்திடாத கதாபாத்திரத்தில் அட்டகாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பாசத்திற்கும் நேசத்திற்கும் நடுவில்சிக்கிதவிக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.ஆகாச வீரன் அம்மா பொட்டுவாக தீபா சங்கர் நடிப்பு பாராட்டுக்குரியது. முற்றும் யோகி பாபு, செம்பன், சரவணன், ஆர் கே சுரேஷ்,வினோத், காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், வினோத் சாகர், முத்துக்குமார், சென்றாயன், ரோஷினி, ஹரிப்ரியன், ஜானகி சுரேஷ், குழந்தை மகிழினி, கிச்சா ரவி, ரோஹன்,ஆதித்ய கதிர் என அனைவரும் பலதரப்பட்ட கதாபாத் திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர். அதோ போல நகைச்சுவை தனித்து திணிக்கப் படாமல் ஒவ்வொரு கதாபாத்திரம் களிடமிருந்து இயல்பாகவே வெளிப்படுகிறது. இசை பின்னணி இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு சுகுமார், கலைக்கு கே. வீரசம்மர், படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், சண்டைக்காட்சி களுக்கு கிங்சன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர் களும்,கதையின் பெரும்பகுதி ஒரே இடத்தில் நகர்ந்தாலும், கதையை நகர்த்துவதிலும் சுவாரஸ்யமாகவும் வைத்திருப்பதிலும் முக்கியபங்கு வகித்துள்ளனர்.
குடும்பஉணர்வுபூர்வமான படங்களுக்கு, குறிப்பாக கிராமத்து படங்களுக்கு பெயர் பெற்ற பாண்டிராஜ், திருமணங் களின் குழப்பம், சின்னச்சின்ன சண்டைகள், குடும்ப குழப்பங்கள், விவாகரத்துக்கு வழி வகுக்கும் உணர்ச்சி கரமான தருணங்கள் என கொத்துக்கறி பரோட்டா போல உள்ள பிரச்சினைக்குரிய உறவு களின் யதார்த்தத்தைகையாளும் திரைக்கதையில் அனுபவம் வாய்ந்த நடிகர்களை வைத்து ஒரு உணர்ச்சிகரமான குடும்பப்படத்தை உருவாக்கியுள்ளார். அதிக எதிர் பார்ப்புகளுடன் ஒரு குடும்பப்படத் தைப் பார்க்க திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றும் வகையில், கமர்ஷியல் பாணியில் கதையோடு இணையும் சிறந்த காட்சி அமைப்புகள் மற்றும் நகைச்சுவையுடன் தலைவன் தலைவி மூலம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளார்.மொத்தத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள தலைவன் தலைவி கண்டிப்பாக அனைத்து குடும்பங் களையும் வசீகரிக்கும் கலகலப் பானஃபேமிலி என்டர்டெய்னர்.
தலைவன் தலைவி சினிமா விமர்சனம்…






