மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை நடத்தினார். இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்,மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று டாக்டர் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று அவர் அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் அரசு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார் நேற்றைய தேதி வரை இத்திட்டத் தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப் பட்டுள்ளன பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங் களை கேட்டறிந்த முதல்வர் தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி நடத்தப்பட வேண்டும் என்றும் முகாம் மனுக்கள் அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதி களை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். அவர் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார் தொடர்ந்து அவர் மூன்று நாட்கள் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் முதல்வர் பங்கேற்க இந்த நிகழ்வு கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர் இதை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனைகள் முகாமிட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது அண்ணன் மு.க. அழகிரி நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர் பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தவித தொய்வும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என்றும் அறிவுறுத்தினார் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் நலமாக உள்ளதாக வும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார் இந்த நிலையில் மருத்துவமனை யில் இருந்தபடி ஆய்வுப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள பதிவு மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை தொடர்கிறேன், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்று வரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை தீர்வுக்கு அனுப்பப்பட்டது எத்தனை உள்ளிட்ட விவரங்களை தலைமை செயலாளரிடம் கேட்டறிந்து மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக்கூடாது என்று அறிவித்துள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.