நாகர்கோவில், ஜூலை 12 குமரி மாவட்டத்தில் மொத்தம் 95 மையங்களில் குரூப் 4 தேர்வு நடை
பெறுகிறது. மெ£த்தம் 35,251 பேர் தேர்வை எழுதுகின்றனர்.தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் உதவியாளர், ஜூனியர் வருவ£ய் ஆய்வ£ளர் ,ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் , தட்டச்சர், உதவியாளர், வனக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 3935 பணியிடங்கள் காலியாக இந்த உள்ளன.
பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.இதற்காக, கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடை பெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக குமரி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 251 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 95 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மொத்தம் 95 மையங்களில் குரூப் 4 தேர்வு 35,251 பேர் தேர்வு எழுதுதல்!






