தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது திருமாவளவன்!

சென்னை, ஜூலை.08-இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மலர்
வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தி உள்ளோம். திராவிட அரசியலில் முன்னோடி,நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் அம்பேத் கருக்கு முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்.ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஆதிதிராவிடர், பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டோர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு சமூகநீதி விடுதி என்று பெயரை மாற்றம் செய்து அறிவித்தமுதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன் . இதனைவிடுதலை சிறுத்தை வரவேற்கிறது.தேர்தல்  களப்பணி கள் விடுதலை சிறுத்தைகள் முதன் மைய னது அல்ல .தேர்தல் நேருங்கி வரும் போது அதனை தீவிரப் படுத்துவோம். அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்வி களுக்கு நான் பதிலளிக்க விரும்ப வில்லை.தி.மு.க. தலைமை யிலான கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின் றன.இந்த கூட் டணி கட்டுக்கோப் பான கூட் டணி. அதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் இருந்தே தேர்தலை சந்திப்போம். புதிய மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் வாக்குறுதி களை 100 சதவீதம் நி றை வேற்ற முடியாது . பேரும் பாலான வாக்குறுதிகளை தி.மு.க. நிறை வேற்றியுள்ளது. முக்கிய சில கோரிக்கைகள் நிறைவேறறப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் பனையூர் பாபு எம்.எல்.ஏ, தலைமை நிலைய செயலாளர் பால சிங்கம், பாவலன், சேகுவாரா,மேலிட பொறுப்பாளர் கள் செல்லத்துரை, இரா. செல்வம், மாவட்டச் செயலாளர்கள் சேத்துப் பட்டு இளங்கோ, கரிகால்வளவன், சௌந்தர், வக்கீல் அப்புனு, உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.