சென்னையில் வெள்ள பாதிப்பு களை தடுக்கும் வகையில் 40லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை சேகரித்து , சேமித்து ,மறுபயன் பாட்டிற்குப்பயன் படுத்தும் ஒரு முறையாகும். இது நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும், வறட்சி யைத்தடுக் கவும், வெள்ள அபாயத் தைக்குறைக்கவும் உதவுகிறது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கூரைகளில் இருந்து மழை நீரை சேகரித்து, நிலத்தடி தொட்டிகளில் சேமித்து வைக்கும் அமைப்பு களாகும். மேலும்,மழை நீரை நிலத்தில் சேகரித்து, நிலத்தடிக்குச் செல்ல அனுமதிப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழை நீர் சேகரிப்பு நகர்ப்புறங்களில் நிலவும் நீர்பற்றாக் குறையை சமாளிக்க ஒரு சிறந்த வழியாகும், குறிப்பாக கோடைக் காலத்தில். மேலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்,அதிக மழை பெய்யும் காலங்களில், வெள்ளப் பெருக் கைத்தடுக்க உதவுகின்றன. சென்னை பெருநகரில் பருவ மழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்து பணி களை ஜரூராக தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் படி,முதற்கட்டமாக கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம் பேட்டை மண்டலங்களில் உள்ள இந்திரா காலனி மைதானம், மாதிரி பள்ளி மைதானம், ஆர்.ஏ.புரம் செயின்ட்மேரிஸ் விளையாட்டு மைதானம், தி.நகர் ஸ்ரீவெங்கட் நாராயணாமைதானம், டிரஸ்ட்புரம் மைதானம், கிரசண்ட்பள்ளி மைதானம்,மேயர் ராம நாதன் சாலை ஆகிய ஏழு விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்ட மானது,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிதியுதவியின் கீழ்,ஜெர்மன் தொழில் நுட்பத்தில், இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டு திடல்களிலும் தலா, 1.6 கோடி ரூபாய் மதிப்பில், தலா 5 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் வகை யில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . . ஒவ்வொரு கட்டமைப்பும், 25 மீட்டர் நீளம்,1 0 மீட்டர் அகலம் கொண்ட தாக உள்ளது. விளையாட்டு மைதானத்தில் பெய்யும் மழைநீர்,இக்கட்டமைப்பு பகுதியில் வந்து சேரும் வகையில், வடிவமைக்கப்படுகிறது. அதைப்போல 15 மண்டலங்களில் உள்ள 770 பூங்காக்களில், 3,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில், நிலத்தடி மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டமைப்பு பணி நடந்து வருகிறது.இதில் 250 பூங்காக்களில் இப்பணிகள் முடிந்துள்ளது. பூங்கா விளையாட்டு மைதானத்தில்,ப ல இடங்களில் அமைக்கப்படும், ‘கேட்ச்பிட்’ எனும் மழை நீர் உள்வாங்கியில் வடியும் தண்ணீர், குழாய் வாயிலாக மழை நீர்சேகரிப்பு கட்டமைப்புக்கு எடுத்து செல்லப் படும். இதன் வாயிலாக, விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குவது தடுக்கப் படும். மேலும், நீர்நிலைகளில் நீர் உள் வாங்காமல், மழைநீர் வடிகால் களில் கொள்ளளவை மீறி செல்லும் போது,இது போன்ற விளையாட்டு திடல்களில் அமைக்கப் பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு திருப்பிவிடப்படும். இதன் மூலம் குடியிருப்புகளில் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். இந்தகட்டமைப்பு, 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீரை சேகரித்து வைக்கும். இவற்றால் நீலத்தடி நீர் உயர்வதுடன், அருகாமை குடியிருப்புகளில் கோடை காலங்களி லும் நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தொடங்கியது சென்னை மாநகராட்சி!






