கைதாகிறார் எம் எல் ஏ ஜெகன் மூர்த்தி?

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே காளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜா மகன் தனுஷ் (23). இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜாவின் மகள் விஜயா ஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அப்பெண் தேனியில் இருந்து புறப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.கடந்த மே 15 ஆம் தேதி விஜயா ஸ்ரீயை காதல் திருமணம் செய்து கொண்டு தனுஷ் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.எனவே, களாம்பாக்கத்தில் வீட்டில் இருந்த தனுஷின் தம்பி இந்திரசந்தி (16) என்ற சிறுவனை காரில் வந்து கும்பல் கடத்தி சென்றனர்.இது குறித்து தனுஷ் தயார் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதற்கிடையே சிறுவன் கடத்தல் சம்பவத்தில் திருவள்ளுவர் எஸ்பி தலைமை யிலான கணிப்படை போலீசார் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தியும் இந்த சம்பவத்தில் தலையிட்டதாக வும் புகார் எழுந்தது இதனை தொடர்ந்து ஜெகன் மூர்த்தி மீது திருவலங்காடு காவல் நிலையத் தில் மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் சிறுவன் கடத்தப்பட்ட தாக தொடரப்பட்ட வழக்கின் முன் ஜாமின் கோரி ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றச் சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி முன்ஜாமீன் வழங்கநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் ஜெகன் மூர்த்தி கைதாக வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிய வந்துள்ளது.