ஜூலை 1 முதல் நாடு முழுவதும் உயரும் ரயில் டிக்கெட் கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி!

புதுடெல்லி, ஜூன்.25- இந்தியாவில்  பொது மக்கள் பலரும் பயன் படுத்தும் பொது போக்கு
வரத்தாக ரயில்கள் உள்ளன. இதற்கிடையே வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்திய ரயில்வே துறை டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. இரண்டாம் வகுப்பு, எக்ஸ்பிரஸ் மற்றும் ஏசி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.இந்தியாவில் பேரது போக்கு வரத்தில் ரயில் களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. நாடு முழுக்க உள்ள முக்கிய நகரங்களை இணைக் கிறது, டாய்லெட் வசதி, நீண்ட தூரப்பயணங்களுக்கு பெர்த் என பல்வேறு வசதிகளும் இருப்பதால் மக்கள் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள். டிக்கெட் விலை குறைவாக இருப்ப தும் மக்கள் ரயில்களைத் தேர்வு செய்ய மற்றொரு முக்கிய மான காரணமாக இருக்கிறது. இதற்கிடையே இந்திய ரயில்வே துறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டண கட்டமைப் பை மாற்றி அமைக்க வுள்ளதாக. அதாவது டிக்கெட் விலையை உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் குறுகிய தூரம் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரயில் டிக்கெட் உயரப் போவதில்லை. அதே நேரம் தொலை தூரப்பயணங்கள் மற்றும் ஏசி வகுப்பு களுக்கு டிக்கெட் விலை உயர்கிறது. நீங்கள் வழக்கமாக இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ப வராக இருந்தால், உங்கள் பயணம் 500 கி.மீவரை இருந்தால், கட்டண உயர்வு இருக்காது. 500 கிமீ வரை சாதாரண வகுப்பில் பயணிப் போருக்கு ரயில் டிக்கெட் உயர்வு இல்லை.அதே நேரம் 500 கி.மீக்கு மேல் பயணிப் போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும்.ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில் களில் பயணம் செய்பவர்கள் ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது 500 கிமீ மேலான பயணத்தில் ஒரு கிமீக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கண க்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும் உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை ரூ.10 அதிகரிக்கும். இது சிறியதாகத் தோன்றினாலும் நீண்ட தூரம் பயணிப் போருக்கு தங்கள் கட்டணம் கணிசமாகவே உயர்ந்து இருக்கும்.  மறுபுறம் ஏசி வகுப்புகளுக்கும் அதாவது,ஏசி சேர் கார், ஏசி 3-டயர், 2-டயர் அல்லது முதல் வகுப்பு ஏசி என எல்லா ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கி.மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. இதுவும் 500கிமீ மேல் தூரம் கொண்ட பயணங் களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது 1,000 கி.மீ பயணத்திற்கு, நீங்கள் முன்பு செலுத்தியதை விட ரூ.20 அதிகமாகச் செலுத்த வேண்டும். புறநகர் ரயில் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.புறநகர் ரயில் சேவைகளை (சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட புறநகர் ரயில்கள்) டிக்கெட் விலையில் மாற்றம் இல்லை.புறநகர் டிக்கெட் விலை அமைப்பில் எந்த வோரு மாற்றமும் இல்லை என்பதால் இதே கட்டணம் தான் தொடரும். அதே போல அலுவலகம் அல்லது பள்ளிக்குச் சென்று வர மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை (பயன்படுத்து வோருக்கும் டிக்கெட்விலை உயராது.தினமும் சீசன் டிக்கெட்டுகளை நம்பி இருக்கும் லட்சக் கணக்கான பயணிகளுக்கு இது ஒரு பெரிய நிம்மதியைத் தருகிறது.