பான் இந்தியா ஸ்டாராக ராஷ்மிகா மந்தனா..

நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் நடிக்கும் பான் இந்தியா படங்கள் எல்லாம் அசால்ட்டாக ஆயிரம் கோடிகளை பாக்ஸ் ஆபிஸில் அறுவடை செய்கிறது. இவர் சினிமாவில் கால் பதிக்க முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தபோது அவரது உருவத்தைப் பார்த்து பல தயாரிப்பாளர்கள் கேலி கிண்டல் செய்ததாக தெரிவித்துள்ளார்.ஆனால் இன்றைக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு கால்ஷீட் அவரிடம் இல்லை எனும் அளவுக்கு பிசியான நடிகையாக பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்.பாக்ஸ் ஆபிஸ் குயின்: ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியாவே கொண்டாடும் நடிகையாக  உயர்ந்து நிற்கிறார். கல்லூரி காலத்தில் அவர் மாடலிங்கில் காட்டிய ஆர்வம் அவரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல், புஷ்பா 2 படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. ஒரே ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 3500 கோடிகள் வசூல் குவித்த நடிகையாக, பாக்ஸ் ஆஃபிஸ் குயினாக மாறி நிற்கிறார்.இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள குபேரா படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் தனுஷ், தெலுங்கு சினிமா உலகிற்கு நாகர்ஜுனா என பலர் இருந்தாலும் மொத்த இந்தியாவையும் கவர் செய்யும் பான் இந்தியா ஸ்டாராக இருப்பது நடிகை ராஷ்மிகா மந்தனா மட்டும்தான்.