திருச்­செந்­தூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.2.59 கோடி, 1½ கிலோ தங்­கம், கிடைத்தது!

திருச்செந்தூர்,ஜூன்.24

திருச்­செந்­தூர் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோவி­லில் பக்தர்­கள் காணிக்­கை யாக செலுத்­தும் உண்­டி­யல் வரு­மா­னம் மாதந்­தோ­றும் எண்­ணப்­ப­டு­கி­றது. இந்த மாதம்2-வது முறையாக நேற்று முன்     ­தி­னம் உண்­டி­யல் காணிக்கை எண்­ணப்­பட்­டது. கோவில் வளா­கத்­தில்தக்­கார் அருள்­மு­ரு­கன் தலைமை­யில், இணை ஆணையர் ஞான­சே­க­ரன் முன்­னி­லை­யில் எண்­ணும் பணி நடந்­தது. கோவில் முது­நிலை கணக்கு அலு­வ­லர்ராஜா­ரா­மன், தென்­காசி உதவி ஆணையர் செந்­தில்­கு­மார், கோவில்உதவி ஆணை யர் நாக­வேல்,கண்­காணிப்­பாளர் ரோகிணி,ஆய்­வர் செந்­தில்­நாயகி, தக்­காரின் நேர்முக உத­வி­யா­ளர் செந்­தமிழ் ­பாண்­டி­யன்,பொது­மக்­கள் பிர­தி­நி­தி­கள் வேலாண்டி, மோகன்,சுப்பி­ர­ம­ணி­யன்,கருப்­பன் மற்றும் சிவகாசி பதி­னெண் சித்­தர் மடம் குரு­குலவேத பாட­சாலை உழ­வா­ர­ப­ணிக்கு­ழு­வி­னர் மற்­றும் கோவில் பணி­யா­ளர்­கள் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். இந்த உண்­டி­யல்   எண்­ணிக்­கை­யில் மொத்­தம் ரூ.2 கோடியே 59 லட்­சத்து 32 ஆயி­ரத்து 514 பணம் கிடைத்­துள்­ளது. அதே போல் 1 கிலோ 515 கிராம் தங்­க­மும், 17 கிலோ 96 கிராம் வெள்­ளி­யும், 883 வெளி­நாட்டு கரன்­சி­க­ளும் பக்­தர்­கள் காணிக்­கையாக செலுத்தி இருந்­த­னர்.