*யங் இந்தியன்ஸ் மதுரை நடத்தும் மாமதுரை விழாவின் பாடல்*

*யங் இந்தியன்ஸ் மதுரை நடத்தும் மாமதுரை விழாவின் பாடல்*

யங் இந்தியன்ஸ் மதுரை சார்பில் மாமதுரை விழா வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

மாமதுரை விழாவின் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகை சந்திப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள்
மாமதுரை விழாவின் மூத்த வழிகாட்டி சு.வெங்கடேசன் மதுரை பாராளுமன்ற உறுப்பினர், யங் இந்தியன்ஸ் தலைவர் பைசல் அஹமத், ஒருங்கிணைப்பாளர் விக்ராந்த் கார்மேகம் மற்றும் யங் இந்தியன்ஸ் துணைத் தலைவர் சென்ஹர் லால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாமதுரை விழாவை முன்னிட்டு மதுரை புகழ் பாடல்கள் வெளியிடப்பட்டது. மாமதுரை பாடலை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட தேவதாஸ் மருத்துவமனை டாக்டர். ஹேமா சதீஷ் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பேட்டி அளித்த மதுரை எம்பி சு வெங்கடேசன்,மதுரையில் சுற்றுலா பாரம்பரியம் கலை வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

உணவு திருவிழா மற்றும் வர்த்தக பொருட்காட்சி தமுக்கம் மைதானத்திலும், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மகளிர் தொழில் முனைவரால் நடத்தப்படும் பொருட்காட்சி காந்தி மியூசியத்திலும், பலூன் திருவிழா வைகை கரையோரத்திலும், இரண்டடுக்கு பேருந்து பவனி மற்றும் இறுதியாக மதுரை கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்தி மற்றும் கலைஞர்களின் பேரணி இறுதியாக நடைபெற இருக்கிறது.

மாமதுரை விழாவில் மொத்தம் 20 நிகழ்வுகள் நடைபெறுகிறது.

மாமதுரை விழாவின் துவக்கம் ஆகஸ்ட் 8ம் தேதி தமுக்கத்தில் நடைபெறுகிறது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்க இருக்கிறார். மேலும் துவக்கு விழா நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியாளர் மாநகர ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *