புவனகிரி அருகே ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்https://youtu.be/zwq06hN_O7U
புதியதாய் வந்த காவிரி தண்ணீரில் புதுமண தம்பதிகள் விவசாயிகள் என பலரும் சிறப்பு வழிபாடு
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, மற்றும் வடக்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதுமண தம்பதியர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடினர். புதிதாக தற்போது வந்துள்ள காவிரி தண்ணீரில் வழிபாடுகள் செய்த அவர்கள் இயற்கையின் அற்புதக் கொடையான சூரிய பகவானுக்கும் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிரூட்டி வரும் நீருக்கும் நன்றிகள் பல தெரிவித்து வழிபட்டனர். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த அவர்கள் தொடர்ந்து நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு போய் கட்டந்தரையாக காட்சியளித்தது. இருந்தபோதிலும் அதிகாரிகள் விவசாயிகளை கைவிட்ட போதிலும் இயற்கை எப்போதுமே விவசாயிகள் பக்கம் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமக இயற்கையாக பெய்த மழை தண்ணீர் தற்போது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






