திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர்
தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போதுபேசிய அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. அண்மையில் கோவில்பட்டியில் இரட்டைக் கொலை போதையினால் நிகழ்ந்துள்ளது. மது, கஞ்சா போன்ற போதை பொருள்களால் தமிழகத்தில் குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக தென்மா வ ட்டங்களில் போதைப் பொருள்கள்
பயன் பாடு அதிகமாக உள்ளது. கஞ்சா போன்ற போதைப்பொருள்களை ஒழிக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.2026 ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் முடிவு
செய்யப்படும். இப்போதே கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாது.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணிஅமைப்போம்.2026 சட்டப்பேரவைத்தேர்தலில் சில கட்சிகள் அணி மாறலாம். எந்த அணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெற்றாலும் அந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆகவே, ஆட்சியில்
பங்கு கேட்போம். இந்த கருத்தைத் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீண்ட காலமாக இந்த கருத்தை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் வலியுறுத்தி வருகிறது.பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவுவது தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ளது மனக்கசப்புதான் விரைவில் அது சரியாகும் எனவும் கூறியுள்ளார்.
2026 ல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறும் கூட்டணி தான், ஆட்சி அமைக்கும். ஜான்பாண்டியன் பேட்டி.






