ஆடி அமாவாசை; களைகட்டும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில்!

திரு­நெல்­வேலி: பாப­நா­சம் அருகே காரை­யாறு வனப்­பகுதியில்
தாமிர­ப­ரணி ஆற்­றின் நடுவே,பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்­ய­னார்
கோயில் அமைந்துள்­ளது. இங்கு ஆண்டு­ தோ­றும் ஆடி அமா­வாசை
அன்று திருவிழா கோலா­க­ல­மாக கொண்­டா­டப்­படும். இந்நி­லை­யில்,
இந்த ஆண்டின் ஆடி அமா­வாசை(ஆகஸ்ட் 4)கொண்­டாப்­படுவதால்,
இன்றே பக்­தர்­கள் சொரிமுத்து அய்­ய­னார் கோயிலை நேக்கி
குவிந்த வண்­ணம் உள்­ள­னர். இந்நி­லையில், குடில்­கள் அமைப்­பதற்கு
ஏது­வாக நேற்று ஒரு நாள் மட்டும் ஆட்டோ, வேன், லோடு ஆட்­டோக்­கள்
உள்­ளிட்ட தனியார் வாக­னங்­கள் அனு­ம­திக்­கப்­பட்டுள்­ளது.
இது­குறித்து பேசிய பக்­தர்­க­ளுள் ஒருவரானவெங்­க­டேஷ், “நேற்று
முதல் பலர் கோயி­லைச்சுற்றி தார்­பா­யைக் கொண்டு குடில்­கள் அமைத்து
தங்கி வருகி­றோம். இந்த 3 நாட்­கள் நிம்­ம­தியாக உற­வி­னர்­கள், நண்­பர்­க­ளு­டன
சேர்ந்து சமைத்து, அய்­ய­னாரை வழி­பட்டு மகிழ்கி­றோம்” என்­றார்.
மேலும் பேசிய கல்­யாணி,இங்கு பிளாஸ்­டிக் பொருள்­கள் மற்­றும் பீடி, சிக­ரெட்,
மது போன்ற போதைப் பொருட்­கள் பயன்­படுத்த தடை விதிக்­கப்­பட்டுள்­ளது.
மின்­சார சதிமட்டும் அமைத்­தால் நன்­றாக இருக்கும் இரவு நேரக்­கும்.மின்­வி­ளக்கு
வசதி குறை­வா­கவே உள­ளது என்­றார்.
அரசு சார்பில் சிறப்பு பேருந்து­கள் இயக்­கப்­பட உள்­ளது. மேலும், இதில் பாது­காப்பு
பணிக்­காக 600 காவ­லர்­கள் மற்­றும் சுமார் 200 வனத்து­றை­யி­னர் ஈடு­பட்டுள்­ள­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *