சென்னை, ஜூன்.19-அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றதலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றைமுன்வைத்தார் .அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப் பட்டுள்ள பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப் பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்கு மாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த அரசாணையின் படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொது நலவழக்குகள் தாக்கல் செய்யப் படுகின்றன என சுட்டிக்காட்டினார். நாளை பொது நலவழக்குகள் விசாரணைக்கு வரும்போது அரசுக்கு மனு அளிக்கப்பட்ட 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட வில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தார்.இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதால் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உறுதி அளித்தார்.அரசு அலுவலகங்களில் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகை வழங்க வேண்டும். புகார் கிடைத்ததில் இருந்து அதிக பட்சம் ஒரு மாதகாலத்திற்குள் நிவர்த்தி செய்ய வேண்டும். கால அவகாசம் தேவைப்பட்டால் அது குறித்து மக்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு அனைத்து துறை அதிகாரி களுக்கும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைச்சுட்டிக்காட்டியே ஐகோர்ட் நேற்று கேள்வி எழுப்பி உள்ளது.
மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் இல்லை என்றால் ரூ.25000 அபராதம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை






