பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன் 15 முதல் அ­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்­ப­தா­வது;பிரத­மர் வீடு வழங்கும் திட்­டம்(PMAY), பிரத­மர் மீன்­வ­ளத்திட்­டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan)
எனப் பிரத­ம­ரின் பெய­ரை­யும் ஸ்டிக்­க­ரில் பிரத­ம­ரின் முகத்­தை­யும் தாங்கிச் செயல்­ப­டுத்­தப்­ப­டும்
திட்­டங்­க­ளுக்­கெல்­லாம் அவர்­களைக் காட்டிலும் அதிக­மா­கப்படியளப்­பது மாநில அரசுதான்!
படையப்பாபடக்’காமெடி’ போல”மாப்பிள்ளை அவர்­தான்,ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்­னுடை­யது” எனச்சேலம் அரசு விழாவி­ல் பேசியிருந்­தேன். பேசினேன் என்­ப­தை­விட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை மந்­திரியின் அடிப்­ப­டை­யற்ற குற்­றச்சாட்­டால் தள்­ளப்­பட்­டேன்
என்­றுதான் கூற­வேண்டும்.அது நாளிதழில் செய்தியாகி, தரவுக­ளோடு விவரிக்­கப்­பட்டுள்­ளது.
இனியா­வது, கண்­ணாடி வீட்டில் இருந்­து­கொண்டுகல்­லெ­றியும் பழக்­கத்தை மத்திய பா.ஜ.க. அரசு
மாற்­றிக்­கொள்ளவேண்டும்.”இவ்­வாறு அவர் தெரிவித்துள்­ளார்.