பாபர் மசூதி இடிப்பு தினம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம் திரளானோர் பங்கேற்பு
நெல்லை புறநகர் மாவட்டஎஸ்டிபிஐ கட்சி சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் பத்தமடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் மஜீத், மாவட்ட பொதுச்செயலாளர் மீராசா, மாவட்ட செயலாளர் சுலைமான், மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கில் ஷபி, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஜலில், எஸ்டிடியூ மாவட்ட தலைவர் சாகுல், மாவட்ட செயலாளர் ஷேக் அலி, சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் கனி, அம்பை தொகுதி தலைவர் கலில், நாங்குநேரி தொகுதி தலைவர் அஷிக், இராதாபுரம் தொகுதி தலைவர் சலிம், எஸ்டிபிஐ கட்சி ஏர்வாடி கவுன்சிலர் ஹலிமா, ஜன்னத் ஆலிமா, ஆனைகுளம் ஊராட்சி கவுன்சிலர் லைத்துல் ஆதிஹா , அப்துல் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, விமன் இந்தியா மூவ்மெண்டின் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா, எஸ்டிபிஐ கட்சி தமிழ் மாநில செயலாளர் ஷபிக் அஹம்மது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் பாபரி பள்ளிவாசலை இடித்ததை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பட்டது. இறுதியாக அம்பை தொகுதி துணை தலைவர் ஷெரிப் நன்றி கூறினார். இதில் ஜமாத்தார்கள், நிர்வாகிகள், பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.






