இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் மீட்டெடுப்போம் முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை,டிச.3 ‘இயற்கைச்சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்’ என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ம் மரக்காணக்காணத்தில் நிவாரணம் மற்றும் மீட்டு பணிகளை ஆய்வு செய்ய செய்ய செல்லும் வழியில், கிழக்கு கடற்கரை சாலை, செ ங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் மழைமற்றும் புயல் காரணமாக சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் இடத்தில் நடைபெற்ற பணியை முதல்வர் ஸ்டா லின் ஆய்வு  செய்தார்.இதை தொடர்ந்து, விழுப்புரம் மந்தவாய்புதுக்குப்பம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு  செய்தார். அவர், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ‘மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன்  தொடர்ந்து பேசி வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாதிக்க ப்பட்ட மக்கமக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். விழுப்புரம், கடலூர் மாவட்ட ங்களில் பலத்த மழைபெய்தது. இதனால், கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த மந்த மாவட்டங்களில் பெரும்பாலன பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து உள்ளதால், பாதிக்கப்பட்ட மக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. புயல் கரையை கடந்தாலும் காற்றழுத்தத்த தாழ்வு நிலை காரணமாக இன்னும் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால், வெள்ளம் முழுமையாக வடியவில்லை . இந்நிலையில், மழை வெள்ளம் பாதித்த விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளார்.முன்னதாக, கடலூர் மாவட்ட த்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர் செல்வத்திடம் அலைபேசியின் மூலம் விசாரித்து அறிந்து  கொண்டார். மேலும், அப்பகுதியில் நிவாரண பணிகளை முடுக்கி விடுமாறும், தேங்கி நிற்கும்
மழைநீரை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கைக்கைகளை மேற்மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தினார்.