தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் ஆள் சேர்ப்பு முகாம் திருச்சியில் நடைபெற்றது

தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் ஆள் சேர்ப்பு முகாம் திருச்சியில் நடைபெற்றது

திருச்சியில் தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் மாவட்ட அளவிலான பணியாளர் களுக்கான ஆள் தேர்வு முகாம் தில்லை நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

திருச்சியில் கூட்டுறவு துறையில்மாவட்ட அளவிலான ஆள் சேர்ப்பு பணி முகாம் தொடங்கியது.இம்மாம் இம்மாதம் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது இம் முகாமில் விற்பனையாளர்கள் 96 பேருக்கும் உதவியாளர்கள் 33 பேருக்கும் உள்ள இடத்தினை பூர்த்தி செய்ய சுமார் 12,688 விண்ணப்பித் திருந்தனர் அதன்படி முகாமில் தினமும் 1000 பேர் என்ற அளவில் முகாமிற்கு வரவழைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன் பின்னர் இறுதியாக 129 பேருக்கான பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்ய இந்த முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு திருச்சி மண்டல இணை பதிவாளர் ஜெயராமன் தலைமையில் மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அரசு, துணை பதிவாளர் பொது விநியோகத் திட்டம் மாரிசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆள் தேர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் ஏராளமான படித்த ஆண்களும், பெண்களும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.