திண்டுக்கல், நத்தம்ரோடு,குடகனாறு விருந்தினர் இல்லத்திலிருந்து ரயில்வே குட்செட் செல்லும் வழியில் உள்ள அந்தோணியார் கோவில்வாசலில் துணியில் சுற்றப்பட்டு பிறந்த குழந்தை இருப்பதாக அதிகாலை 3.30 மணி அளவில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு கிடைத்த தகவலை தெடர்ந்து விரைந்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர்.உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவிசிகிச்சை அளித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு பிரிவில் உள்ள ஐ.சி.யுவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தகுழந்தையை வீசியதுயார்?,அந்த குழந்தையின் பெற்றோர்யார்?, தவறான உறவால் பிறந்தகுழந்தை என்பதால் இவ்வாறு வீசினார்களா? என்பது குறித்துநகர் வடக்கு திண்டுக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் அதிகாலை நேரத்தில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்ச தாய்!






