மணிப்பூரில் காலடி எடுத்து வைக்­காத மோடி- மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!

புது­டெல்லி, நவ.18 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்க­ளாக அரங்­கேறி வரும் வன்முறை சம்­ப­வங்­களால் அங்கு பதற்­றமான சூழல் நிலவுகிறது. குறிப்­பாக ஜிரி­பாம் மாவட்­டத்தில் 6 பேர் கொல்­லப்பட்ட சம்­ப­வம் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­படுத்தியுள்­ளது.வன்மு­றையை கட்டுப்­ப­டுத்த மணிப்பூரின் இம்­பால் பகுதியில் காலவ­ரை­யற்ற ஊர­டங்கு மற்றும் இணைய சேவை இடைநிறுத்­தம் அமல் ப­டுத்­தப்­பட்டுள்­ளது.இந்த நிலை­யில்,மணிப்பூரில் காலடிஎடுத்து வைக்­காத பிர­தமர் மோடியை அந்த மாநில மக்­கள் ஒரு ­போதும் மன்னிக்க மாட்டார்­கள் என காங்­கிரஸ் தலை­வர் மல்லிகார்ஜுன கார்கேவிமர்சித்துள்­ளார். இதுதொடர்­பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்­ப­தாவது;-“உங்­கள் இரட்டை இன்ஜின் அரசாங்­கத்தின் கீழ், மணிப்பூர் ஒன்­றா­கவும் இல்லை,பாதுகாப்­பா­கவும் இல்லை. கடந்த 2023 மேமாதம் முதல் நீடித்து வரும் கற்­பனை செய்ய முடியாத வலியும்,பிரிவி­னையும், வன்மு­றை­யும் மணிப்பூர் மக்­க­ளின் எதிர்­காலத்தை அழித்து விட்­டது.தனது வெறுப்பூட்டும் பிள­வுவாத அரசியலுக்கு உத­விகர­மாக இருப்­ப­தால், வேண்டுமென்றே மணிப்பூர் எரிக்­கப்­பட வேண்டும் என்று பா.ஜ.க விரும்புவ­தாகத் தெரிகிறது.கடந்த 7-ந்தேதி முதல் மணிப்பூரில் குறைந்­த பட்­சம்  17பேர் உயிரிழந்­துள்­ள­னர். எல்­லை யோர வட­கிழக்கு மாநிலங்க­ளுக்கும் வன்முறை பரவி வருகிறது.அழகான எல்லை மாநில­மானமணிப்பூரை பிர­த­மர் மோடி கைவிட்டு விட்­டார்.இனி எதிர்­கா­லத்தில் மோடி மணிப்பூருக்குச்சென்­றா­லும், துயர மான நேரத்தில் பிரச்­சினைக்கு தீர்வு காண தங்கள் மாநிலத்தில் காலடி எடுத்து வைக்­காத மோடியை அந்த மாநில மக்­கள் ஒரு­ போ­தும் மன்னிக்க மாட்­டார்­கள். இவ்வாறு மல்லிகார்­ஜுன கார்கே தெரிவித்துள்­ளார்.