சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம் அமலாக்கத் துறை நடவடிக்கை!

சென்னை:அம­லாக்­கத்துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் கூறி­யி­ருப்­பதா­வது: சென்­னை யைச் சேர்ந்த ஜிஐ ரீடெ­யில்பிரைவேட்லிமி­டெட் என்ற தனி­யார் நிறு­வ­னம் முறை­கேடாக பங்­கு­களை விற்­பனை செய்து அதன்­மூ­லம் கிடைத்த ரூ.195கோடியை மறைத்து அத்தொ­கையை ஐக்­கிய அரபுநாடு­க­ளில் இந்­தி­யர்­க­ளால் நிர்­வ­கிக்­கப்­பட்டு வரும் நிறு­வ­னத்­தில் மறை­மு­கமாக முத­லீடு செய்­தி­ருப்­பதாக அம­லாக்­கத் துறைக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.இதை­ய­டுத்து, அம­லாக்­கத்துறை­ இ­யக்­கு­ந­ரக தென்­மண்­டல அதி­கா­ரி­கள் அந்­நி­று­வ­னத்­தில் சோதனை நடத்­தி­ய­போது அந்­தத் தக­வல் உண்­மைதான் என்­பது தெரி­ய­வந்­தது.இதை­ய­டுத்து அன்­னியசெலா­வணி மேலாண்மை சட்­டத்­தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு அந்­நி­று­வ­னத்­துக்கு சொந்­தமான ரூ.195 கோடிமதிப்­புள்ள சொத்­து­கள்பறி­மு­தல் செய்­யப்­பட்டன. அவற்றை அர­சு­டமை­யாக்க அம­லாக்­கத் துறை விசா­ரணை ஆணை­யம் உத்­த­ர­விட்­டது.மேலும் அந்­நி­று­வ­னத்துக்கு ரூ.566.5 கோடி அபரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டுள்­ளது.