தீபாவளி பண்­டி­கையை முன்னிட்டு இரண்டு நாட்­களில் ரூ.438 கோடிக்கு மது விற

சென்னை, நவ.3 தீபாவளிபண்டிகை,நேற்று முன்தினம் கோலா­க­லமக கொண்­டா­டப்­பட்­டது. முன்­ன­தாக டாஸ்­மாக்கடை­க­ளில் வழக்­கமான விடுமுறை நாட்­களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்­பனை நடை­பெ­றும். ஆனால் தீபாவளி,பொங்­கல் போன்ற பண்டிகை காலங்க­ளில் விற்­பனை அதிக அள­வில் இருக்­கும்.இந்நிலை­யில் தீபாவளி பண்டி­கையை முன்னிட்டு இரண்டு நாட்­களில் ரூ.438 கோடிக்கு மதுவிற்­ப­னை­யாகி உள்­ள­தாக தக­வல் தெரிவிக்­கப்பட்டுள்­ளது.இதன்­படி சென்­னையில் கடந்த 30ம் தேதிரூ.47.16 கோடிக்­கும்,31ம் தேதி தீபாவளி அன்று ரூ.54.18 கோடிக்­கும் மதுவிற்­பனை செய்­யப்­பட்­டது. அதே ­போன்று மது­ரை­யில் 30ம் தேதி ரூ.40.88கோடி, 31ம் தேதி ரூ.47.73 கோடிக்­கும், திருச்சியில் 30ம் தேதி ரூ.39.81 கோடி,31ம்தேதி ரூ.46.51கோடிக்­கும், சேலத்தில் 30ம் தேதி ரூ.38.34 கோடி,31ம் தேதி ரூ.45.18 கோடி,கோவை­யில் 30ம் தேதி ரூ.36.40 கோடி, 31ம் தேதி ரூ.42.34 கோடிக்­கும் மதுவிற்­பனைசெய்­யப்பட்­டது.அதன்­படி, தமிழ­கம் முழுவதும் தீபாவளி பண்­டி­கை­யை­ யொட்டி கடந்த 30ம்தேதி ரூ.202.59 கோடிக்­கும், தீபாவளி நாளான 31ம்தேதி ரூ.235.94 கோடி என மொத்­தம் ரூ.438.53கோடிக்கு மது விற்­பனைசெய்­யப்­பட்டுள்­ளது.இது கடந்த ஆண்­டை விட ரூ.29.10 கோடி குறைவாகும். கடந்த ஆண்டு(2023) தீபாவளி பண்டி­கை­யை ­யொட்டி அதி­கபட்­ச­மாக மதுரை மண்­ட­லத்தில் ரூ.101.04கோடிக்கு மதுவிற்­ப­னை­யாகி இருந்­தது.ஆனால் இந்த ஆண்டு மது­ரை­யை­விட சென்னைமண்­டலத்தில் அதி­க­பட்­சமாக ரூ.101.34 கோடிக்கு மது விற்­ப­னை­யாகி உள்­ளது.