நாகை:நாகப்பட்டினம் -இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் எனகப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது.முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன்,ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்க ப்பட்டு இயக்கப்பட்டது.அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட்ட 4 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து இனிவாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பயணிகள் வசதிக்காக எதிர்வரும் 8ம்தேதி முதல் வெள்ளிக் கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என ‘சிவகங்கை’கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை _- இலங்கை கப்பல் சேவை ஐந்து நாட்களாக அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!






