மதுரை அக்டோபர் 15, மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவி லில் நவராத்திரி விழாகடந்த 3ஆம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் கோவர்த்தனாம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம், சிவபூஜை, அர்த்தநாரீஸ்வரர், மகிஷாசுர வர்த்தினி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான சுப்பிரமணிய சுவாமி பசுமலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளிஅலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் கோயிலி லிருந்து பசுமலை மண்டபத்திற்கு புறப்பாடானார். நவராத்திரி பண்டிகை நிறைவு நாள் பத்தாம் நாள் நிகழ்ச்சியாகவிஜயதசமி அன்று பசுமலையில் சுப்ரமணியசுவாமி தெய்வானை தங்ககுதி ரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டுத்திக்கும் பலிகொடுக்கப்பட்டு நான்கு திசைகள் மற்றும் மேல்நோக்கி அம்பு போடப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்று கோவிலுக்கு வந்து தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுப்பிரமணி யசாமி தெய்வானை அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுக ளை துணை ஆணையர்/செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா,அறங்காவலர்கள் சண்முகசுந்தரம் பொம்மதேவன் மணி செல்வம் ராமையா மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் பசுமலை மண்டபபொறுப்பாளர் அழகு கோயில் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்!






