திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கல்பனா ஆட்டோ சங்க ஸ்டாண்டில் செயலாளர் பழனியப்பன் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆயுத பூஜையில் சுமார் 50 ஆட்டோக்களுக்கு வாழை இலை தோரணம் கட்டி பூக்களால் அலங்கரம் செய்து கற்பூர தீப ஆரதனை காட்டி சிறப்பாக பூஜை செய்யப்பட்டது. மேலும் இந்த ஆயுத பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொரி, கடலை, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது
இவ்விழாவில் திரளான ஆட்டோ ஓட்டுனர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆயுத பூஜை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கல்பனா ஆட்டோ சங்க ஸ்டாண்டில்ஆயுத பூஜை விழா!






