புவனகிரியில் மூட்டை மூட்டையாக சுமார் 500 கிலோ அளவிலான ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் இருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்
பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பீடு 13 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் 500 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போதை பொருள் பறிமுதல் செய்து இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் தப்பி ஓடிய ஒருவருக்கு போலீசார் வலை வீச்சு இன்று காலை புவனகிரி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது ஹோண்டா காரில் தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சிதம்பரத்தைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் இருதயராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் குடோனில் விற்பனைக்காக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது இதனை அடுத்து சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான போலீசார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ அளவிலான குட்கா மற்றும் போதை பொருளை பறிமுதல் செய்து பாஸ்கர் மற்றும் இருதயராஜா ஆகியோர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்
மேலும் தப்பி ஓடிய பாலா என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருளின் மதிப்பீடு சுமார் 13 லட்சம் இருக்கும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது






