கல்லிடை குறிச்சி ரயில் நிலையம் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் காணப்படுகிறது.

நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சி ரயில் நிலையம் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் காணப்படுகிறது. குறிப்பாக கழிப்பிட வசதி எதுவும் இல்லை. நிழற்குடை இல்லை. இது குறித்து ரயில் பயணிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெனி ராயன் கூறும் போது தினமும் 2000 பயணிகள் வந்து போகும் இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் ஒன்று தான் உள்ளது. தானியங்கி டிக்கெட் கொடுக்கும் மிஷின் இருந்தும் பயன் இல்லை. கழிப்பறை கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பயணிகள் ஒதுங்க நிழற்குடை இல்லை. வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவஸ்தை படும் நிலை உள்ளது. ஆண்டிற்கு 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி தரும் இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கண்டிப்பாக வேண்டும் இதற்காக ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கம் கடந்த 6 மாத களாக பல்வேறு முயற்ச்சிகள் செய்து வருகிறது என்றார். சங்க துணை தலைவர் செல்வம், பொருளாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், துணை பொருளாளர் பாலு, மற்றும் டேனியல் ஆகியோர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லிடை ரயில் பயணிகள் அடிப்படை தேவையை

தென்னக ரயில்வே பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு… நமது எதிர்பார்ப்பும் இது தான்…..