வரத்து குறைவால் தக்காளி விலை ரூ.110 ஆக அதிகரிப்பு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

போரூர், அக். 8 கோயம்­பேடு,காய்­கறி மார்க்­கெட்­டுக்கு ஆந்­திராமற்­றும் கர்­நாடகா ஆகிய மாநி­லங்­க­ளில் இருந்து தக்­காளி விற்­பனைக்கு வரு­கி­றது.
கடந்த மாதம் சில்­லரை விற்­பனை­யில் தக்­காளி ஒரு கிலோ ரூ.40க்கு
மட்டுமே விற்­கப்­பட்­டது.இந்த நிலை
யில் வரத்து குறைந்து வரு­வ­தால் தக்­காளி விலை கடந்த ஒரு வார­மா­கவே தொடர்ந்து உயர்ந்து வரு­கி­றது.2 நாட்­க­ளுக்கு முன்பு மொத்த
விற்­பனை­யில் ஒரு கிலோ ரூ.55க்கு விற்கப்­பட்ட தக்­காளி தற்போது மேலும் அதி­க­ரித்து சதத்தை தாண்டி உள்­ளது.மார்க்­கெட்­டில் உள்ள கடை­க­ளில் ரூ.80 வரை விற்­கப்­ப­டு­கி­றது.வெளி ­மார்க்­கெட்­டில் உள்ள கடை, காய்­கறி கடைக­ளில் ஒரு கிலோ தக்­காளி ரூ.110 வரை விற்பனை செய்­யப்­படு­கி­றது.தக்­காளி விலை அதி­க­ரிப்­பால் இல்­லத்­தர­சி­கள் அதிர்ச்சி அடைந்து உள்­ள
னர். இத­னால் தின­சரி உணவில் தக்­காளி பயன்­ பாட்டைகுறைத்து விட்­ட­னர்.தக்­காளி விலை மேலும் அதி­க­ரிக்­கும் என்றே கூறப்­ப­டு­கி­றது.
இது ­குறித்து வியாபாரிகள்
கூறி­ய­தா­வது:வட­மா­நி­லங்­க­ளில் வரலாறு காணாத வகை­யில் தொடர்ந்து பெய்து வரும் மழை­யால் அங்கு தக்­காளி உற்­பத்தி
கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
இத­னால் அங்குள்ள வியா­பா­ரி­க­ளும் தற்போதுஅதி­க­ள­வில் ஆந்­திரா மற்றும் கர்­நாடகா மாநி­லங்­க
ளில் குவிந்து தக்­கா­ளியை கொள்­மு­தல் செய்து வரு­கின்­ற­னர்.
இதன் காரண­மாக தக்­காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உற்­பத்தி நடக்­கும் இடத்­தி­லேயே விலை கடு­
மை­யாக அதி­க­ரித்து உள்­ளது.
மேலும் கோயம்­பேடு சந்­தைக்கு வரும் தக்­கா­ளி­யின் வரத்­தும் நாளுக்கு நாள் குறைந்து வரு­கி­றது.
தின­சரி 60க்கும் மேற்பட்ட லாரி­க­ளில் வரும் தக்­காளி திடீ­ரென 50 லாரி­க­ளாக குறைந்து விட்­ட­தால்
அதன் விலை­யும் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது.இதே நிலை நீடிக்­கும் பட்­சத்­தில் தக்­காளி­யின் விலை மேலும் உச்­சம் அடையும்.இவ்­வாறு
அவர்­கள் கூறி­னர்.