சென்னையில் கலைஞர் விருது பெற்ற நெல்லை கவிஞர்களுக்குப் பாராட்டு விழா!

கவிதை உறவு இலக்கியமாத இதழ் மற்றும் வி.ஜி.பி.உலகத் தமிழ்ச்சங்கம் இணைந்து முத்தமிழ்
அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவினையட்டி தமிழகம் தழுவிய அளவில் நூறு கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து கலைஞர் விருது வழங்கியது. கடந்த மாதம் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இதனை வழங்கினார். இதில் விருது பெற்ற திருநெல்வேலி கவிஞர்கள் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர் கோ. கணபதி சுப்பிர
மணியன் மற்றும் கலைபதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி ஆகியோருக்கு தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பில் பாராட்டு விழா நடை பெற்றது.விழாவிற்கு தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான் தலைமை தாங்கினார். தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி கே.ஏ.ஏ.கந்தசாமி மற்றும் நறுமுகை நற்றமிழ்ச் சங்கத்தலைவர் ஜெயமேரி முன்னிலை வகித்தனர். தாமிரபரணி வாசகர் வட்டத்தலைவர் முனைவர் கா.சர
வணக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ஹரிஹரன், பேராசிரியை மகாலட்சுமி, பணி நிறைவு பெற்ற சுத்தமல்லி அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோமதிநாயகம், கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகி கவிஞர் கோதை மாறன், சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைத் தலைவர் கவிஞர் முத்துசாமி, எழுத்தாளர் காயல் அருள் ,
மருத்துவக் கல்லூரி மாணிக்க வாசகம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுமையச் செயற்குழு உறுப்
பினர் புன்னைச் செழியன்,சித்த மருத்துவக் கல்லூரி இருளப்பன் காேபாலகிருஷ்ணன் , அகவை
முதிர்ந்த தமிழறிஞர் சங்க மாநிலத் தலைவர் கவிஞர்சுப்பையா , புகைப்படக்கலைஞர் துரைராஜ் தச்சை குருநாதன் உள்ளிட்டோர் பாராட்டுரை வழங்கினர்.கலைஞர் விருது பெற்றகவிஞர்களுக்கு தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பிலும் தமிழ் அமைப்புகள் சார்பிலும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.முனைவர் கணபதி சுப்ரமணியன் ஏற்புரை வழங்கினார். அவர் பேசும் போது
“சிறுவயதிலிருந்தே கலை,நாடகங்கள் போன்ற வற்றால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவன் நான் . எல்லா மேடைகளிலும் பங்கேற்பதை மிகுந்த ஈடுபாடு கொண்டு செய்து வந்தவன். என்றாலும் எனது பிற்கால பட்டிமன்ற நடுவர் – பேச்சாளர் எனும் தகுதிக்கு சிறப்பாக ஆதரவளித்து ஊ க்கம் கொடுத்த எனது குடும்பத்து உறவுகள் முழு முதற்காரணம். தொடர்ந்து என்னோடு பழகிய நண்பர்கள் அனைவரும் எனது முன்னேற்றத்தில் மிகுந்தஆர்வம் கொண்டிருந்தனர்.ஏர்வாடி ராதாகிருஷ்ணன்,திரு பள்ளித்தாளாளர் மரியசூசை, மறைந்த திருவெங்கடாசலம், பேராசிரியை
உஷாதேவி போன்றவர்கள் எல்லாம் என் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு உற்சாகப் படுத்தி  வந்தவர்களில் முக்கியமானவர்கள்.மைய நூலக வாசகர் வட்டதுணைத் தலைவராக பணி
யாற்றி வருவதால் புத்தகத்திருவிழா சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் முன் நின்று செயல் படுவதற்கு மைய நூலகத்தின் நூலகர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாகமும் மிகுந்த ஊக்க மளித்தனர். சங்கர் மேல் நிலைப்பள்ளி மற்றும் சங்கர் சிமெண்ட் நிர்வாகத்தினரும் எனது மாணவர்கள் நலன் சார்ந்த சமுதாயப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்காெள்வதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.தொடர்ந்து ஏற்புரையாற்றிய கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி “வளரிளம் பருவத்திலிருந்து இன்றைய நாள் வரை கலைஞரின் எழுத்திலும் பேச்சிலும்கவரப்பட்டு அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது செயல் பாடுகளால்,உழைப்பால், உன்னதத்தமிழ்ப் பணியால், சமுதாயத்தின் ஏற்றத்தாழ் வுகளை சமன் செய்ய அவர் மேற்கொண்ட போராட்டங்களால் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவன் நான்.அவரது பெயரால் விருது பெற்றிருப்பது எனக்கு ஒருவாழ்நாள் மகிழ்ச்சியை தந்தது. காலத்தால் இயன்ற அளவு தமிழ்ப் பணி செய்துவரும்  எனக்கு ஆதரவாக இருக்கும் நெல்லையின் இலக்கியத் தோழர்கள்,சமூக ஆர்வலர்கள், நண்பர்கள், பணியாற்றிய விக்கிர மங்கலம், செங் கோட்டை,சுத்தமல்லி  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,சக ஆசிரிய ர்கள் , மாணவ -மாணவிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் மன மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். விருது வழங்கி மகிழச் செய்த கவிதை உறவு மாத இதழுக்கும் வி.ஜி.பி.உலகத்தமிழ்ச் சங்கத்திற்கும் இந்த நிகழ்வு நடக்ககாரணமாக இருந்த தேசியவாசிப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் நெல்லை டைம்ஸ் குழுமத்திற்கும் நன்றி சாெல்ல கடமைப் பட்டிருக்கிறேன்”என்று தெரிவித்தார். நிறைவாக மீனாட்சிபுரம் கிளை நூலகர் அகிலன் முத்துக் குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.