ஓபிசி பிரிவை போலவே எஸ்சி பிரிவிலும் கிரீமி லேயர் வரையறை வேண்டும்! சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்து

டெல்லி: எஸ்சி பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்த நீதிமன்றம், ஓபிசி பிரிவில் இருப்பதைப் போலவே எஸ்சி பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரைமுறை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2009ம் ஆண்டில் எஸ்சி பிரிவினருக்கான 18% இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் சாதியினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.. இந்த உள் இட ஒதுக்கீட்டுக்குத் தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் எஸ்பி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கியிருந்தது. இதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டன. இதுபோல நாடு முழுக்க 20 மனுக்களை இருந்த நிலையில், அதை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு தலைமை நீதிபதியை உள்ளடக்கிய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்குகள் மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதாவது பட்டியலினத்தவர்- பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் தலையிடும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *