உலகன்குளம் ஊராட்சியில் ரூ.20.70 லட்சம் மதிப்பிலான
புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா
சேரன்மாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சியில் ரூ.20.70 லட்சம் மதிப்பிலான புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி. திறப்பு விழா நடைபெற்றது.
சேரன்மகாதேவி யூனியனுக்குட்பட்ட உலகன்குளம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.20.70 லட்சம் மதிப்பிலான 60 ஆயிரம் லிட்டர்
கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சேரன்மாதேவி யூனியன் சேர்மன் பூங்கோதை குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கனகமணி கஸ்தூரி பாய்
முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேரன்மாதேவி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். இதால் மாவட்ட
பொதுக்குழு உறுப்பினர் தொ.மு.ச கணேசன், மாவட்ட பிரதிநிதி மூலச்சி சீவலமுத்து குமார் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






