மண்பாண்டத் தொழிலாளர்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான மண்ணை இலவசமாக பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம்.

மதுரை மதுரை மாவட்­டத்­தில் நீர்­வ­ளத்­துறை மற்றும் ஊரக வளர்ச்சித்­து­றை­யின் பரா­ம­ரிப்பில் உள்ள தேர்வு செய்­யப்­பட்ட 787 நீர் நி­லைகளிலிருந்து வண்­டல்மண் / மண் எடுப்­ப­தற்கு அனு­மதிவழங்­கு­வது தொடர்­பாக (Removal of clayand silt) மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளி­யீடு எண்.06,நாள்.24.06.2024 பிரசுரம் செய்­யப்­பட்­டுள்­ளது.அதன்­படி மதுரை கிழக்குவட்­டத்­தில் 126, மதுரைமேற்கு வட்­டத்­தில் 4,மதுரை தெற்கு வட்­டத்தில் 6, மதுரை வடக்கு வட்டத்­தில் 70, வாடிப்­பட்டி வட்­டத்­தில் 37, மேலூர் வட்­டத்­தில் 270, திருப்­பரங்­குன்­றம் வட்­டத்­தில் 9,உசிலம்­பட்டி வட்­டத்­தில் 83, பேரை­யூர் வட்­டத்­தில் 73, திரு­மங்­க­லம் வட்­டத்தில் 62 மற்றும் கள்­ளிக்குடி வட்­டத்­தில் 47 நீர்நி­லைகள் தேர்வு செய்­யப்­பட்டு இணை­ய­த­ளத்­தில்பதி­வேற்­றம் செய்­யப்­பட்டுள்­ளது.அதனடிப்­ப­டை­யில்,வண்­டல் மண் / மண்எடுப்­ப­தற்கு அனு­மதிவழங்­கு­வது தொடர்­பாக ஊரக வளர்ச்சித் துறை / நீர்­வ­ளத்­துறை செயற்­பொ­றி­யா­ளர்­கள், புவியி­யல் மற்­றும் சுரங்­கத்­துறை துணைஇயக்கு­நர், வரு­வாய் வட்டாட்­சி­யர்­கள், கிராம நிரு­வாக அலு­வ­லர்­கள் மற்­றும் ஏரி / நீர்த்­தேக்­கங்­க­ளின்பொறுப்­பா­ளர்­கள் ஆகி­யோர்­க­ளால் மேற்­கொள்ளப்­பட வேண்டிய நிலை­யான வழிகாட்டு நெறிமு­றை­களின்­படி (StandardOperating Procedure) கடந்தஜீன் 2024 மாதம் முதல்விண்­ணப்­பங்­கள் பெறப்­பட்டு அனு­மதி வழங்­கப்­பட்டு வருகி­றது.மதுரைமாவட்­டத்­தில்,விவ­சாய நில மேம்­பாட்டிற்­காக 1,302 விண்­ணப்­பங்­கள் வரப்­பெற்­ற­தில் 933 விவ­சா­யப் பய­னா­ளிக­ளுக்கு சம்­மந்­தப்­பட்ட வட்­டாட்­சி­யர்­க­ளால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.மேலும் தொடர்ந்து வரப்­பெ­றும் விண்­ணப்பமனுக்­களுக்கும் அனு­மதி வழங்கப்­பட்டு வருகி­றது.இம்­மா­வட்­டத்­தில் மண்­பாண்­டத் தொழில் செய்­வ­தற்­காக 26 விண்­ணப்பமனுக்­கள் மட்­டும் பெறப்­பட்டு 26 மண்­பாண்­டத்தொழில் செய்­யும் பய­னாளிகளுக்கு அனு­மதி வழங்கப்­பட்­டுள்­ளது.எனவே, மண்­பாண்­டத்தொழி­லா­ளர்­கள் அனை­வரும் தங்­க­ளுக்குத் தேவையான மண்ணை இல­வ­சமாக பெற்றுக்கொள்­வதற்கு ஏது­வாக தங்களு­டைய விண்­ணப்பமனுக்­களை உரிய ஆவணங்­க­ளு­டன் www.tnesevai.tn.gov.in என்ற இணை­ய­த­ளத்­தின் வாயிலாகபதி­ வேற்­றம் செய்து அனுமதிபெற்று பய­ன­டை­யு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­ப­டுகி­றது என்று மாவட்ட ஆட்சித் தலை­வர் மா.சௌ.சங்­கீதா, தெரிவித்­துள்­ளார்.