திருவில்லிபுத்தூர் அருகே இன்று காலை விபத்து: பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து மாணவர்கள் உள்பட 4 பேர் நசுங்கி சாவு! 10–க்கும் மேற்பட்டோர் காயம்!!

திரு­வில்­லி­புத்­தூர், செப்.27 திரு­வில்­லி­புத்­தூர்அருகே பள்­ளத்­தில் மினி­பஸ் கவிழ்ந்து 2 மாண­வர்­கள் உள்­பட 4 பேர் உடல் நசுங்கி செத்­த­னர். 10–க்கும் மேற்­பட்டோர் காயம­டைந்­த­னர்.இன்று காலை நடந்த இந்த விபத்து பற்­றிய விவரம் வரு­மாறு:–விரு­து­ந­கர் மாவட்­டம் மம்­சா­பு­ரத்­தில்இருந்து திரு­வில்­லி­புத்­தூ­ருக்கு இன்று காலை8.20மணிக்கு மினி பஸ் ஒன்றுபுறப்­பட்டு சென்­றது.அதில் 50–க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் இருந்­தனர். சிறிது தூரம் சென்­றதும் ­ அரசு ஆரம்ப சுகதார நிலையம்  அருகே  உள்ள ­பள்­ளத்­தில் நிலைத்­த­டு­மாறி மினி பஸ் கவிழ்ந்­தது. இத­னால் பஸ்சுக்­குள் இருந்­தவர்­கள் அலறி­னார்­கள். அக்­கம் பக்­கத்­தில் இருந்­தவர்­கள் அங்குவந்து சிலரை மீட்­ட­னர்.மம்­சா­பு­ரம் போலீ­சா­ருக்­கும்,  தீயணைப்பு படையின­ருக்­கும் தக­வல்  கொடுக்­­­கப்­பட்­டது.அவர்­கள் அங்கு வந்து மீட்­பு ப­ணி­யில் ஈடு­பட்டனர். ­பஸ் ­க­விழ்ந்த  இடத்­தில் ஒரு கல்­லூரிமாண­வர், பள்ளிமாண­வர் ஒரு­வர்உள்­பட 4 பேர் பஸ்சுக்­குள் அடி­யில் சிக்கி உயி­ரி­ழந்­த­னர்.  4  பேரின் பலி­யான­வர் உடல்­களை ­­ போலீ­சார் மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்­காக திரு­வில்­லிபுத்­தூர் அரசு மருத்­து­வ­ம­னைக்கு ­ அனுப்பிவைத்­த­னர். மேலும் 10–க்கும் மேற்­பட்டோர் காயம­டைந்­த­னர். அவர்­க­ளும் சிகிச்­சைக்­காக திரு­வில்­லி­புத்­தூர் ஆஸ்பத்­தி­ரி­யில் அனும­திக்­கப் பட்­ட­னர் .அவர்­க­ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த விபத்து குறித்து  மம்­சா­பு­ரம்  போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றார்­கள்.