தூத்துக்குடி, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் பசுமை தமிழக இயக்கநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை அமைச்சர் கீதாஜீவன்,மேயர் ஜெகன்பெரியசாமிஆகியோர் நட்டு வைத்தனர்.தமிழ்நாடுஅரசின் வனத்துறை, தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பசுமைத்தமிழக இயக்கநாளை முன்னிட்டு நடை பெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில், மாவட்டவருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன்,மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பசுமைத்தமிழகம் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் பிரபு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முத்துராஜ் தூத்துக்குடி வனசரக அலுவலர் சங்கரன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கல்லூரி போராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமாமாேர் கலந்து கொண்டனர்
பசுமை தமிழக இயக்க நாளை முன்னிட்டு, அமைச்சர் கீதாஜீவன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்






