கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடலூர் மாவட்டத்திலேயே இதுவரை 5 லட்சம் பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு குட்கா ஹான்ஸ் பிடிபட்டது இதுவே முதல் முறை சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் துறையினர் பறிமுதல். சிதம்பரம் அருகில் உள்ள. அண்ணாமலை நகர் காவல் சரகம்
கடலூர் மாவட்டகண்காணிப்பாளர் திரு.ராஜாராம் அவர்களின் உத்தரவின் பேரில்,காவல்துணைக்கண்காணிப்பாளர் திரு.லாமேக் அவர்களின் அறிவுரையின் பேரில் ஆய்வாளர் அம்பேத்கார் உதவி ஆய்வாளர் மகேஷ்,கஜேந்திரன் ,மணிகண்டன் ,ஸ்ரீதர் ஆகியோர் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டுபிடிக்க ,
இன்று காலை 09-00மணி அளவில் ராஜேந்திரன் சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பல்கலை நோக்கி பைக்கில் வந்த கலியமூர்த்தி வயது 50 த/பெ. சுந்தரமூர்த்தி கொள்ளிடம் மயிலாடுதுறை மாவட்டம் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அவரது வாகனத்தில் அண்ணாமலை நகர் பகுதிகளிலும் சிதம்பரம் பகுதிகளிலும் விற்பனை செய்வதற்காக ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் மூட்டையிலிருந்ததை கைப்பற்றியும்.
ஹான்ஸ் மற்றும் போதை பொருளை கடைகளில் விற்பனை செய்ததில் கிடைத்த பணம் ஐந்து லட்சத்து ஐயாயிரம் ரூபாய்(5,05,000) அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
அவர் விற்பனை செய்த அண்ணாமலை நகர் சிவபுரி சாலையில் மளிகை கடை வைத்திருந்த பெண்ணழகி என்பவரின் கடையிலிருந்து 100 பாக்கெட் ஹான்ஸ் பாக்கெட்டுகளும், வேளக் குடியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மளிகை கடையில் இருந்து 100 பாக்கெட் ஹான்ஸ்பாகட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கலியமூர்த்தியின் சகோதரர் செல்வராஜ் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது சிதம்பரம் நகரில் ஓமக்குளம் அருகே உள்ள செல்வராஜின் வீட்டில் இருந்து சுமார் 40 கிலோ எடையுள்ள ரூபாய் 1,28,000 மதிப்புள்ள குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டது.






