அறந்தாங்கியில் கஞ்சா வியாபாரி கைது 40 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல

அறந்­தாங்கி, செப். 23 புதுக்கோட்டை மாவட்­டம் அறந்­தாங்கி இந்­திராநகர் பகு­தி­யில் வீட்­டில் வைத்து கஞ்சா வியா­பா­ரம் பார்ப்­ப­தாக அறந்­தாங்கி காவல் ஆய்­வாளர் கரு­ணா­க­ரன் தலைமை­யி­லான காவ­லர்­க­ளுக்கு ரக­சிய தகவல்கிடைத்­த­தன் அடிப்­படை­யில் சம்­பவ இடத்திற்கு சென்ற காவல் உதவி ஆய்­வாளர் சண்­மு­கம் தலைமை­யி­லான காவ­லர்­கள் வீட்­டில் வைத்து கஞ்சா வியா­பா­ரம் பார்த்த முத்து என்­ப­வரை அறந்­தாங்கி காவல் ஆய்­வாளர் மற்­றும் தனிப்­படை காவ­லர்­கள் கைது செய்­த­னர்.அவ­ரி­டம் இருந்து 10கிராம் எடை கொண்ட 40கஞ்சா பொட்­டலங்­கள் மற்­றும் 16 ஆயி­ரம் ரொக்­கப் பணம் ஆகி­ய­வற்றை கைப்­பற்றி அறந்­தாங்கி காவல் நிலை­யத்­தில் ஒப்­படைத்­த­னர். இந்த சம்­ப­வத்தால் அப்­ப­கு­தி­யில் பர­பரப்­பாக காணப்­பட்­டது.