ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய ரவுடி ‘சீசிங்’ ராஜா சுட்டுக் கொலை

சென்னை, செப்.23 ஆம்ஸ்ட்­ராங் படு­கொலை சம்­ப­வம் தொடர்­பாக ஆற்­காடு சுரே­ஷின் தம்பி பொன்னை பாலு,வழக்­க­றி­ஞர் அருள், திரு­வேங்­கடம்,திரு­மலை,பா.ஜ.க. நிர்­வாகி செல்­வராஜ், மணி­வண்­ணன், சந்­தோஷ், ராமு, கோகுல்,சிவ­சக்தி,தமிழ் மாநில காங்­கி­ரஸ் நிர்­வா­கி­யாக இருந்த ஹரி­க­ரன்,அ.தி.மு.க.நிர்­வா­கி­யாக இருந்த வழக்­க­றி­ஞர் மலர்­கொடி சேகர்,ஆற்­காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்­ளிட்டோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கட்சி வேறு­பா­டின்றி பல்­வேறு கட்­சி­களைச் சேர்ந்த முக்­கிய நிர்­வா­கி­கள் பல­ரும்,பிர­பல ரவு­டி­கள் பல­ரும் ஆம்ஸ்ட்­ராங் கொலைவழக்­கில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். முக்­கிய அர­சி­யல் பிர­மு­கர்­க­ளும், பிர­பல ரவு­டி­க­ளும் இந்­தக் கொலை­யில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. ரவு­டி­கள், பல்­வேறு அர­சி­யல் கட்­சி­யைச்சேர்ந்த பிர­மு­கர்­கள் என இந்த கொலை வழக்­கில் ஏற்க­னவே 27 பேர் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் அதன் தொடர்ச்­சி­யாக நேற்று முன்­தி­னம்(செப்.21)இந்த வழக்­கில் தேடப்­பட்டு வந்த முக்­கிய நப­ரான ரவுடிபுதூர்அப்­புவை டெல்­லி­யில் வைத்து போலீ­சார் கைது செய்­த­னர். சம்போசெந்­தில், சீசிங் ராஜா உள்­ளிட்டரவு­டி­களை­யும்போலீ­சார் தேடி வந்­த­னர்.ஆந்­திர மாநி­லம் கடப்­பாவில்தலைமறை­வாகஇருந்த ரவுடிசீசிங் ராஜாவை தனிப்­படை போலீ­சார் நேற்று கைது செய்­த­னர்.ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில் 29வது நப­ராக அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.இதை­ய­டுத்து,சீசிங் ராஜாவை தனிப்­படைபோலீ­சார் சென்­னைக்கு அழைத்து வந்­த­னர்.அந்த சம­யத்­தில் ஆயு­தங்களை காட்­டு­வ­து ­போல் சென்ற சீசிங் ராஜா அங்குபதுக்கி வைத்­தி­ருந்த கள்­ளத்துப்­பாக்­கியை எடுத்து போலீ­சாரை நோக்கி சுட்­டதா­கத் தெரி­கி­றது. அவ­ரது துப்­பாக்­கி­யில் இருந்து பாய்ந்த 2குண்­டு­கள் போலீஸ் வாக­னத்தை தாக்­கி­யுள்­ளது.எனவே போலீஸ் இன்ஸ்­பெக்­டர் முத­லில் வானத்தை நோக்கி சுட்டு எச்­ச­ரித்­துள்­ளார். பின்­னர் அவனை நோக்கி சுட்­டுள்­ளார். இதை­ய­டுத்து சீசிங் ராஜா குண்டு பாய்ந்து பலி­யாகி விட்­டார்.சீசிங் ராஜா நேற்று கைது செய்­யப்­பட்ட நிலை­யில்,இன்று என்­க­வுண்­டர் செய்­யப்­பட்­டுள்­ளார்.சீசிங் ராஜாமீது 5 கொலை வழக்­கு­கள் உள்­பட 32க்கும் மேற்­பட்ட கொலை வழக்­கு­கள் உள்­ளன. 5 முறை குண்­டர் சட்­டத்­தி­லும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில் ஏற்­கனவே ரவுடி திரு­வேங்­கடம் என்­க­வுண்­டர் செய்­யப்­பட்ட நிலை­யில், 2வது நபராக சீசிங் ராஜா என்­க­வுண்­ட­ரில் சுட்­டுக்கொல்­லப்­பட்­டுள்­ளார்.திரு­வேங்­க டம், காக்­காதோப்பு பாலா­ஜியை தொடர்ந்து தற்போது மூன்­றா­வது என்­க­வுண்­ட­ராக சீசிங் ராஜாசுட்­டுக் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்.